நெற்றியில் சிலுவை அடையாளம் வரையவும்.
இதோ ! ஆண்டவரின் சிலுவை. சத்துருகள் அகன்றுப் போகட்டும். இயேசுவின் நாமத்தினால் தீயசக்திகளின் ஆதிக்கம் எங்கள் ஒவ்வொருவரைவிட்டும், எங்கள் குடும்பங்களை விட்டும், இவ்வுலகிலுள்ள எல்லா நாடுகளையும், மனுமக்கள் அனைவரை விட்டும் அகன்று போகட்டும். யூதாகுலத்தின் சிங்கமும், தாவீதின் குலக் கொழுந்துமானவர் ஜெயம் கொண்டார். !அல்லேலூயா (3)
எல்லோரும்: இயேசுவே! உமது அன்புக் கோட்டைக்குள்ளே, அக்கினிகோட்டைக்குள்ளே, இரத்தக் கோட்டைக்குள்ளே எங்களை வைத்துப் பாதுகாத்தருளும் (2 முறை சொல்லவும்)
ஒருவர் : இயேசுவின் திருசிரசிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே!
எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும் (5 முறை சொல்லவும்)
இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே (5 முறை சொல்லவும்)
ஒருவர் : இயேசுவின் திருத்தோளிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே
எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும் (5 முறை சொல்லவும்)
இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே (5 முறை சொல்லவும்)
ஒருவர் : இயேசுவின் திருவிலாவிலிருந்து வழிந்தோடிய பரிசத்த இரத்தமும், தண்ணீருமே
எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும். (5 முறை சொல்லவும்)
இயேசுவின் உமது அன்புக்கோட்டைக்குள்ளே (5 முறை சொல்லவும்)
ஒருவர்: இயேசுவே! உமது திருக்கை, கால்களிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே
எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும். (5 முறை சொல்லவும்)
இயேசுவின் உமது அன்புக்கோட்டைக்குள்ளே (5 முறை சொல்லவும்)
ஒருவர் : இயேசுவின் அனைத்துக் காயங்களிலிருந்தும் வழிந்தோடிய பரிசுத்தஇரத்தமே
எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும். (5 முறை சொல்லவும்)
இயேசுவின் உமது அன்புக்கோட்டைக்குள்ளே (5 முறை சொல்லவும்)
செபிப்போமாக
எங்களுக்காகச் சிலுவையில் தொங்கிய இயேசு இரட்சகரே ! எங்கள்பகைவர்களிடமிருந்து எங்களைப் பாதுகாத்தருளும். சகல அபாய மரணத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றி மகா பாக்கியமான நல்ல மரணத்தையும், நித்திய பரலோக ஜீவியத்தையும் எங்களுக்குக் கட்டளை இட்டருளும்.
இரக்கம்நிறைந்த இயேசுவே! நீங்கள் சுமந்த பாரமான சிலுவையால் ஏற்பட்ட உம்தோளின் கொடூரக் காயத்தினையும் உம் ஐந்து திருக்காயங்களையும் பார்த்து, பாவிகளாகிய எங்கள் மேலும், பரிசுத்த சகல ஆத்துமாக்கள் மீதும் இரக்கமாயிரும். எங்களுக்காகப் பாடுகள் ஏற்ற இயேசுவே! அன்று புனிதத்துணியில் பதிந்த உம் திருமுகத்தை நாங்கள் தரிசிக்க இப்போதும் எப்போதும் எனக்கு வரம் அருளும். ஆமென் !