உறுதிப்பூசுதல்

0
3274

முன்னுரை:

“உறுதிப் பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தில் விசுவாசிகள் இன்னும் நெருங்கிய முறையிலே திருச்சபையுடன் பிணைக்கப்படுகின்றனர். தூய ஆவியின் தனி வல்லமையால் உறுதிப்படுத்தப் படுகின்றனர். இவ்வாறு கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாகச் சொல்லாலும் செயலாலும் விசுவாசத்தைப் பரப்பவும் பாதுகாக்கவும் மிகவும் கடமைப்பட்டுள்ளனர்,” (திருச்சபை11)

திருமுழுக்கு பெற்றவர்கள் உறுதிப்பூசுதல் என்னும் அருட்சாதனத்தின் வழியாக கிறிஸ்தவ வாழ்வுப் பயணத்தில் முன்னேறுகின்றனர், அவர்கள் இந்த அருட்சாதனத்தில், பெந்தகோஸ்தே நாளில் ஆண்டவர் அனுப்பிய அதே தூய ஆவியைப் பெற்றுக் கொள்கின்றனர்.

தூய ஆவி கொடுக்கப்படுவதால் விசவாசிகள் இன்னும் முழுமையாக கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவர்கள் ஆகின்றனர். திடம் பெறுகின்றனர், கிறிஸ்துவின் உடலை அன்பிலும் விசுவாசத்திலும் கட்டி எழுப்பக் கிறிஸ்துவுக்குச் சான்று பகரக் கூடியவராகின்றனர். அவர்கள் ஆண்டவரின் அழியா முத்திரையால் பொறிக்கப்படுவதால் உறுதிப்பூவுதல் ஒரே முறைதான் அளிக்கப்படும். (சடங்குமுறை1,2)

7 Gifts of the Holy Spirit

தூய ஆவியின் கொடைகளும் கனிகளும்:

உறுதிப்புசுதல் வழியாக நாம் தூய ஆவியின் கொடைகளான ஞானம், புத்தி, அறிவு, திடம், பக்தி, விமரிசை, தெய்வபயம் (wisdom, understanding, knowledge, fortitude, piety, counsel, fear of the Lord) எனும் ஏழு கொடைகளையும் பெறுகிறோம். உறுதிப்புசுதல் பெற்றவர் தூய ஆவியின் கனிகளான பரிவன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, கனிவு, பரிவு, நன்னயம், பெருந்தன்மை, மென்மை, நம்பிக்கை, ஒழுங்கு, தன்னடக்கம், கற்பு (charity, joy, peace, patience, kindness, mercy, goodness, generosity, gentleness, faithfulness, modesty, self-control, chastity) ஆகியவைகளைத் தங்கள் வாழ்கையில் கடைப்பிடிக்க ஊக்கம் பெறுகிறார்கள். திருமுழுக்குப் பெற்ற யாரும் தக்க தயாரிப்புடன் இத்திருவருட்சாதனத்தைப் பெறலாம். இத்திருவருட்சாதனத்தை யாரும் இருமுறை பெற இயலாது.

யார் யார்?
வழக்கமாக உறுதிப்பூசுதலை வழங்குபவர் அப்போஸ்தலர்களின் வழித்தோன்றல்களும், தலத் திருச்சபையின் தலைவருமான ஆயரே. அவருடைய அனுமதியின் பேரில் குருவும் நிறைவேற்றலாம். உறுதிப்பூசுதல் பெறுவோருக்கு ஞானத்தாய் தந்தையர் இருவரில் ஒருவராவது இருப்பது அவசியம். திருமுழுக்கில் ஞானப் பெற்றோராக இருந்தவரே உறுதிப்பூசுதலிலும் ஞானப் பெற்றோராக இருப்பது சிறப்பானது.

ஆயர் அல்லது ஆயரால் அதிகாரம் பெற்ற குரு ‘கிறிஸ்மா’ என்னும் புனித தைலத்தால் உறுதிப்பூசதல் பெறுபவரது நெற்றியில் பூசி ………(பெயர்) தூய ஆவியின் முத்திரையைப் பெற்றுக் கொள், பரம தந்தையின் உன்னத கொடை அவரே!
உறு.பெறு. : ஆமென். என்று சொல்லும் இப்பகுதி உறுதிப்புசுதலின் முக்கிய பகுதியாகும்.