இணையத்தின் வாயிலாக இறைப்பணி தொடர இதயத்தில் அன்பை ஏந்தி இணைந்திருக்கும் என் அன்பு மக்களே. ஆன்மீக பயணத்தில் அக்கறையும் தாகமும் கொண்ட நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
இறைப்பற்று உங்கள் ஒவ்வொருவரையும் பிறர் அன்பிலும், குடும்ப நட்புறவிலும் மேலும் உங்களை வளர்க்க செபிக்கிறேன். ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில், சில வேலைகளில், நாம் நம்மையே இழக்க நேரிடும். இறைவனில் வருகின்ற தருணம் தான் நம்மையே நாம் கண்டுணரச் செய்திடும்.
இறைவாக்கினர் அன்று இறைவார்த்தையை ஏந்தி வந்தார்கள். இன்று இணையமே இறைவனை சுமந்து நமது உள்ளங்கைகளில் தவழ வருகிறது. இவ்வழி ஊடக வசதிகளை உள நல ஆன்மீக வளர்ச்சிக்கு பயன்படுத்துவது, பாறையை செதுக்கி அழகிய சிலை வடிப்பதர்க்கு ஒப்பாகும்.
உளிகள் உடைக்க அல்ல உருவாக்கப் பயன்படும் சாதனம். எல்லா சமூக தொடர்பு சாதனங்களும் பயன்படுத்தும் விதத்திலே வளர்ச்சி தரும். இவ்வழியே இறைவனைக் கண்டு இறைவழி வாழ உங்களை அழைக்கிறேன்.
வாருங்கள் நாம் ஒன்றாய் இறைக்குடும்பமாய் அன்பு செய்வோம். இறைவனில் இறைச்சமூகமாய் வாழ்வோம்.