இயேசுவின் திருஇருதய ஜெபமாலை

0
18372

கிறிஸ்துவின் திருஆத்துமமே என்னைத் தூய்மையாக்கும். கிறிஸ்துவின் திருஉடலே என்னை மீட்டருளும் கிறிஸ்துவின்
திருஇரத்தமே என்னைக் கழுவியருளும்.
ஒ! நல்ல இயேசுவே எனக்கு செவி சாய்த்தருளும். உமது திருக்காயங்களுக்குள் என்னை மறைத்தருளும்.
உம்மைவிட்டு என்னை பிரியவிடாதேயும். பகைவர்;களிடமிருந்து என்னைக் காத்தருளும். என் மரண நேரத்தில் என்னை அழைத்து உம் புனிதர்களோடு எக்காலமும் உம்மைப்புகழ எனக்கு கற்பித்தருளும்.

தேவ இரகசிய கருத்துக்கள்
1.பிற மதத்தினர் ,பிரிவினைச் சகோதரர் அனைவராலும் இழைக்கப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக .
2.மாசு நிறைந்த கிறிஸ்தவர்களால் ஏற்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
3.நாம் அனைவரும் கட்டிக்கொண்ட பாவங்களுக்குப் பரிகாரமாக.
4.மனிதர் அனைவராலும் வருவிக்கப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
5. எல்லோரும் திரு இருதயத்தை அறிந்து அன்பு செய்யுமாறு அமல அன்னை புனிதர் அனைவரின் அன்புப்பெருக்குடன் ஒப்புக்கொடுப்போம்.

சிறிய மணியில்:
இயேசுவின் மதுரமான திருஇருதயமே!
– என் சிநேகமாயிரும்.

பெரிய மணியில்:
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே!
-என் இருதயத்தை தேவரீருடைய இருதயத்துக்கு ஒத்ததாகப் பண்ணியருளும்
மரியாயின் மாசற்ற திரு இருதயமே!
– என் இரட்சணியமாயிரும்.

ஐம்பதுமணி முடிந்த பின்:
முதல் : இயேசுவின் திருஇருதயமே!
எல் : எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முதல் : சென்மப் பாவமில்லாமல் உற்பவிதத்த புனித மரியாயின் மாசற்ற திரு இருதயமே !
எல் : எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல் : திரு இருதயத்தின் ஆண்டவளே!
எல் : எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல் : இயேசுவின் திருஇருதயமானது
எல் : எங்கும் சிநேகிக்கப்படுவதாக.
முதல் : என் இயேசுவே !
எல் : இரக்கமாயிரும்.
முதல் : திரு இருதயத்தின் சிநேகிதரான புனித சூசையப்பரே!
எல் : எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுவின் திருஇருதயமே! உமது இராட்சியம் வருக. எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எனது செபம், தபம், அனுதின அலுவல், இன்பதுன்பம் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். எனது கடைசி மூச்சுவரை உம்மை சிநேகிக்கவும் உமக்கு மகிமை வருவிக்கவும் வேண்டிய வரம் தந்தருளும் . – ஆமென்.

இயேசுவின் திரு இருதய மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் நன்றாய்க் கேட்டருளும்.
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய ஆவியாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
புனித தமத்திருத்துவமாகிய ஏக சர்வேசுரா…
என்றும் வாழும் பிதாவின் திருச்சுதனாகிய இயேசுவின் திரு இருதயமே… எங்கள் மேல் இரக்கமாயிரும்.
புனித கன்னித்தாயின் வயிற்றில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திரு இருதயமே….
தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திரு இருதயமே….
அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திரு இருதயமே….
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திரு இருதயமே…
அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திரு இருதயமே…
இறைவனின் இல்லமும் விண்ணக இயேசுவின் திரு இருதயமே…
அன்புத் தீ சுவாலித்தெரியும் சூளையான இயேசுவின் திரு இருதயமே….
நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான இயேசுவின் திரு இருதயமே…
தயாளமும் சிநேகமும் நிறைந்த இயேசுவின் திரு இருதயமே…
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திரு இருதயமே…
எல்லா ஆராதனைப் புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திரு இருதயமே…
இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மைய இடமுமான
இயேசுவின் திரு இருதயமே…
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திரு இருதயமே..
இறைத்தன்மை முழுமையாகத் தங்கி வழியும் இயேசுவின் திரு இருதயமே…
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திரு இருதயமே…
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச்செய்யும் இயேசுவின் திரு இருதயமே…
நித்திய சிகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திரு இருதயமே..
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திரு இருதயமே…
உம்மை மன்றாடி வேண்டி அனைவருக்கும் நிறைவையளிக்கும் தாராளமான இயேசுவின் திரு இருதயமே…
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திரு இருதயமே…
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திரு இருதயமே…
நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திரு இருதயமே…
எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்தின இயேசுவின் திரு இருதயமே…
மரணம் வரையும் கீழ்ப்படிந்திருந்த இயேசுவின் திரு இருதயமே…
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திரு இருதயமே…
சர்வ ஆறுதல் அனைத்தின் ஊற்றான இயேசுவின் திரு இருதயமே..
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திரு இருதயமே…
எங்கள் சமாதானமும், ஒற்றுமையின் இணைப்புமான இயேசுவின் திரு இருதயமே…
பாவங்களுக்கு பலியான இயேசுவின் திரு இருதயமே…
உம்மில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மீட்பரான இயேசுவின் திரு இருதயமே…
எல்லாப் புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திரு இருதயமே…
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் ‘செம்மறியே!
(3 முறை)
1. எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
2. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. எங்கள் மேல் இரக்கமாயிரும்;.
குரு : இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுள்ள இயேசுவே!
எல் : எங்கள் இதயம் உமது இருதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்.

செபிப்போமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உமது அன்புத் திருமகனின் இருதயத்தையும், அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும், தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு, நீர் இரங்கி மன்னிப்பளித்தருளும். உம்மோடு தூய ஆவியின் ஐக்கியத்தில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். – ஆமென்.