புனித அந்தோனியார் நவநாள்

பதுவை பதியராம் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும், (மும்முறை)

குரு: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.

குரு: பரிசுத்த திரித்துவத்துக்கு இப்பொழுதும் எப்பொழுதும் தோத்திரம் உண்டாவதாக
எல்: ஆமென்.

குரு: பரிசுத்த தேவதாயே எங்கள் துன்ப வேளையில் நாங்கள் உமது அடைக்கலத்தை தேடி உம்மிடம் வருகின்றோம். மகிமை நிறைந்தவளும் மாசில்லாதவளுமான கன்னிகையே, எங்கள் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், எல்லா ஆபத்துகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும்.

எல்: ஆமென்.

எல்: இப்புண்ணிய ஷேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோனியாரே ! பரிசுத்தத்தனம் விளங்கும் லீலியே ! விலைமதிக்கப்படாத மாணிக்கமே ! பரலோக பூலோக காவலரே ! கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே ! பாவிகளின் தஞ்சமே ! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோனியாரே ! சூரத்தனமுள்ள மேய்ப்பரே ! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே ! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே ! இவ்உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ ! எங்கள் தஞ்சமும் நீரல்லவோ ! எங்கள் சந்தோஷமும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ ! நீர் எங்கள் ஞானத்தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர்கள் பாராட்டுவார்களோ, உம்மைத் தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும்; அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பெயரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூயதான தயாபரமே ! தயைக்கடலே ! தவிப்பவர்களுக்குத் தடாகமே ! தனித்தவருக்குத் தஞ்சமே ! உமது இன்பமான சன்னிதானம் தேடிவந்தோம். ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடிவந்தோம். துன்பம், பிணி, வருமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயன் அற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ ஐயா, எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக்கோடுக்கிறோம். எங்களைக் கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் -ஆமென்.

செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி ! புனித அந்தோனியாரை வணங்கி அவருடைய சலுகையை இரந்து, சாஷ்டாக்கமாக விழுந்து கிடக்கிற யாத்திரிகர்களாகிய அடியோர்கள் பேரில் தயை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்.

இறைமக்களின் மன்றாட்டு (எழுந்து நிற்க)

குரு: ஜெபிப்போமாக – எங்கள் பாப்பரசருக்கும் ஆயர்களுக்கும், குருக்களுக்கும், நாட்டு தலைவர்கள், சமூகத்கலைவர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், விவேகத்தையும் அளித்தருள வேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: மக்கள் அனைவரும் சமுதாய சமாதானத்திலும், சமய ஒற்றுமையிலும் சகோதரரை போல் வாழ்கை நடத்த வேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: இத்திருத்தலத்தை நாடிவரும் பக்தர்கள் உமது திருவளத்தின்படி உடல் நலத்தில் நீடிக்கவும், மன அமைதியற்றோர் நிம்மதி அடையவும் வேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: தீய நிந்தனையிலிருந்தும், பேயின் சோதனையிலிருந்தும் நாங்கள் விடுதலை பெறவேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: நாங்கள் விரும்பும் கோரிக்கைகள் கைகூடவும், எங்களை எதிர்கொண்டு வரும் தீமைகள் விலகவும், என்றும் உமது ஆதரவு இருக்கவும் வேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: யாவராலும் கைவிடப்பட்டு நம்பிக்கை இழந்து நிற்கும் நெருக்கடியான வேளையில் எங்களுக்கு உதவவேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஜெபிப்போமாக

குரு: எல்லாம் வல்ல இரக்கமுள்ள இறைவா, உம் அளவிலா அன்புக்குரியவரும, உமது அருளின் துணையால் கோடி அற்புதரெனப்பட்ட புனித அந்தோனியாரை அண்டி வந்துள்ள யாதிரீகர்களான எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக

எல்: ஆமென்

பாடல் (நிற்கவும்)

மாநிலம் போற்றிம் தூயவனே
உந்தன் பாதாரம் நாடி வந்தோம்
கோடிஅற்புதரெனப் பகழ் பெற்றீர்-2
நாடிவரும் எம் குறை தீர்ப்பீர் (மாநிலம்)

இயேசுவை கையில் தாங்கியதால்
இறைவனின் அருளை அடைந்தீரே
மலைபோல் வரும் துயர் வாழ்வினிலே-2
நிலைகுலையாதிருக்க அருள்வீர் (மாநிலம்)

நற்செய்தி வாசகம் (நிற்க)

மறையுரை (அமர்க)

நோயாளிகளை ஆசீர்வதித்தல் (முழந்தாளிடுக)

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.

எல்: அவரே பரலோகத்தையும் பூலேகத்கையும் படைத்தார்.

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக

குரு: ஜெபிப்போமாக

எல்: ஆண்டவரே உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும். நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும். நாங்கள் துன்பங்களினால் தூய்மை அடைந்து, உமது இரக்கத்தினால் விரைவில் குணம் அடையும்படி அருள் புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக- ஆமென்.

குரு: (வலது கரத்தை நீட்டி) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்கு காவலாயிருக்க உங்கள் பின்னும், உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக. எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து உங்களை வழிநட்துவாராக.

எல்: ஆமென் (பின்னர் தீர்த்தம் தெளித்தல்)

காணாமல் போன பொருளை கண்டடைவதற்கு ஜெபம்

ஓ மகா உன்னத மகத்துவம் பொருந்திய அர்ச்சிஸ்ட அந்தோனியாரே! சகல நன்மைகளும் நிறையப்பெற்ற அப்போஸ்தலரே! தேவரீர் (காணாமற்போன பொருளைத் திரும்பக் கண்டடையத் செய்கிற) புதுமைகளைச் செய்யும் வரத்தை ஆண்டவரிடமாக அடைந்திருக்கிறீரே; (காணாமல் போன பொருளைத் திரும்பக் கண்டடையும்படி) உமது ஆதரவைத் தேடி வந்திருக்கிற அடியேனுக்கு இத்தருணத்தில் உதவி புரிந்தருளும். தேவரீரைக் கொண்டு இத்தகைய மேலான அதிசயங்களைச் செய்விக்கிற ஆண்டவரை நான் மேன்மேலும் மகிமைப்படுத்திக் கொண்டாடி வருகிறேன். -ஆமென்.

புனித அந்தோனியார் பிராத்தனை:

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பரமண்டலததிருவின் திருப்பெட்டியான புனித அந்தோனியாரே -எங்க….
மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோனியாரே
தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோனியாரே
தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான புனித அந்தோனியாரே
தூய்மையில் லீலிமலரான புனித அந்தோனியாரே
சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான புனித அந்தோனியாரே
இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான புனித அந்தோனியாரே
சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான புனித அந்தோனியாரே
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோனியாரே
அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ளியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோனியாரே
மீனாரென்கிற சந்நாசிகளுக்குப் படிப்பனையாகிய புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய கொழுந்தான புனித அந்தோனியாரே
பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான புனித அந்தோனியாரே
வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான புனித அந்தோனியாரே
ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோனியாரே
ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான புனித அந்தோனியாரே
பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோனியாரே
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோனியாரே
வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோனியாரே
மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோனியாரே
பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான புனித அந்தோனியாரே
காணமற்போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே
இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான புனித அந்தோனியாரே
பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான புனித அந்தோனியாரே
தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ணிய மென்கிற ஞானவெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோனியாரே
உலகம் என்கிற அப்பத்தைப புறக்கணித்தவரான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான புனித அந்தோனியாரே
சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான புனித அந்தோனியாரே
எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான புனித அந்தோனியாரே
நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான புனித அந்தோனியாரே
நன்நாக்கழியாத நற்தவத்தினரான புனித அந்தோனியாரே
புதுமைகளினால் பிரபல்யியமான புனித அந்தோனியாரே
திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோனியாரே
ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோனியாரே
சிறு குழந்தை ரூயஅp;பத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின புனித அந்தோனியாரே

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை; மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருவிதருகிறவருமாய் பாவ அக்கினவுடைய காந்தியைச் சீக்கிரத்திலே அமர்த்துகிறவரும் உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பதாவானவர். இம்மையினுடைய அவதிக்கு பிற்பாடு எளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருளவேண்டுகிறோம்.

இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக,

பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி ! உமது ஸ்துதியரும் முத்தப்பேறு பெற்றவருமான தூய அந்தோனியாரை ஸ்துதிக்கிற உமது புனித பத்தினியான திருச்சபையின் பிள்ளைகளளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்திய பேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். -ஆமென்.

அனுகூலமடைய செபம்:
ஓ ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே ! மெய்யான தாழ்ச்சியன் கண்ணாடியே! பரிசத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ ! மகிமையிலங்கும் புனித அந்தோனியாரே ! உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளி வரம் விNஷித்த சுதந்திரம் பெற்று அகமகிழ்தீரல்லோ ! அதுபோல் வல்லமையு;ள் உமமுடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய் பிரகாசிக்கிறதல்லோ ! தேவரீர் என்பேரில் இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்…..

(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)

அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் புறத்தியாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய் நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக்கடவேனாக. -ஆமென்.