அன்பிற்குரிய இறைமக்களே!

கோவில் இறைவன் இருக்கும் இல்லம். நாம் அனைவரும் இக்குடும்பத்துப் பிள்ளைகள் எனும் உறவை வளர்க்கும் இடம் என்ற புரிதலோடு அன்றைக்குத் திருப்பலி முடிந்ததும், வெளியில் இருந்த குழந்தைகளை எல்லாம் விளையாடச் சொல்லி, நானும் அவர்களோடு விளையாடச் சென்றேன். “பாதர்! நீங்களா, எங்களோடு விளையாடவா?” என்ற ஆச்சரியத்தோடும், மகிழ்ச்சியோடும் புதிதாய் ஒரு குழுவில் இணையும் குழந்தைக்குத் தருகிற வரவேற்பு எனக்கும் கிடைத்தது.
ஒரு சிறுவன் உடனடியாக “பாதர் பஸ்ட் பேட்டிங் செய்யட்டும்” என்று சொல்ல, எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி விளையாட ஆரம்பித்தேன். விளையாடிக் கொண்டே ஒவ்வொரு குழந்தையின் பங்களிப்பையும் கவனித்துக் கொண்டிருந்தேன்.
அங்கு ஒரே ஒரு சிறுவன் மட்டும் தனிமையில் ஒதுங்கி ஓரமாய் நின்று கொண்டிருந்தான். நான் அவனை நோக்கிச் சென்று, அவனது தோள் மீது என் கைகளை வைத்து, அவனுடைய உயரத்திற்குத் தகுந்தாற்போல் என்னுடைய உடலையும் வளைத்துக் கொண்டு, அவனுடைய கண்களை நோக்கி, நான் சொன்னேன், “நீ எங்களுக்கு ரொம்ப முக்கியம். இப்போது நீ விளையாடப் போகிறாய்” என்று எனது வாய்ப்பை அவனுக்குப் பகிர்ந்து கொடுத்தேன். இரண்டு பந்துகள் தான் அவன் விளையாடியிருப்பான். மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் மட்டையை தூக்கி எறிந்துவிட்டு, என்னை கட்டி அணைத்துக் கொண்டு, அவன் சொன்ன வார்த்தை இன்னும் என் காதில் ஒலிக்கிறது. “ஐ றiளாஇ ஐ hயன ய கயவாநச டமைந லழர”” எனக்கு உங்களைப் போல் ஒரு தந்தை கிடைக்க வேண்டு;ம் என நான் விருப்பப்படுகிறேன்” என்று சொன்னான். “என்ன ஆனது?” என்று அவனிடம் கேட்டேன். வீட்டில் விளையாட பல பொருட்கள் இருக்கிறது. ஆனால் ஆட்கள் இல்லை. “ஐ கநநட டழநெடல ” என்றான்.
அன்புமக்களே! தனிமை நமது டி.என்.ஏ யில் இல்லாத ஒன்று. நம்மடைய தனிமை நமக்கு இன்னல் தருகிறது என்றால்… எதுவோ நம்மிடத்தில் சரியாக இல்லை என்பதை உணர்த்துகிறது. “தனிமையை எதிர்கொள்ள அல்லது தனிமையைப் போக்க நல்ல மருந்து, பணம், பதவி என்று நினைத்து ஓடினோம். அதை எட்டிப் பிடித்தவுடன் இன்னும் அதிகத் தனிமையை உணர்ந்தோம்.”
அன்பிற்குரியவர்களே! தனிமையைப் போக்க ஒரே ஒரு மருந்தை மட்டும், ஒரு நல்ல மருந்தை மட்டும் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். “உறவுகளை உறவுகளில் நங்கூரமிடுங்கள்”
அன்பிற்குரியவர்களே! இந்த வார்த்தை எந்த அளவிற்குப் புரிதலைக் கொடுக்கிறது என்று தெரியவில்லை. உறவுகளில் நங்கூரமிடுதல், கப்பல் கரையை அடைந்தவுடன் நங்கூரமிட்டு அதை அங்கேயே நிறுத்துகிறார்கள். அதுபோல நம்முடைய நல்ல உறவுகளில் ஏற்படுத்துகிற மகிழ்ச்சியை, மனதில் நங்கூரமிட்டுக் கொண்டு, அதை மீண்டும் மீண்டும் நம்முடைய நினைவிற்குக் கொண்டு வந்து வாழ்வதே தனிமையைப் போக்கும் நல்ல மருந்து.
இயேசு எங்குச் சென்றாலும் சீடர்களோடு செல்கிறார். மனதில் வேதனை வரும் பொழுது, அதை தம்முடைய சீடர்களோடு பகிர்ந்து கொள்கிறார். யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். அவரைச் சுற்றியிருந்த எல்லோரும் அவரைவிட்டுப் போனபின் கூடவே இருந்த ஒருசில சீடர்களை நோக்கி, அவர் கேட்கிற வார்த்தை “நீங்களும் என்னை விட்டுப் போக விரும்புகிறீர்களா? என்ற வருத்தமான கேள்வி. அந்தக் கேள்வியில் பொதிந்து இருக்கும் தனிமையின் வருத்தத்தை உங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறதா?
அன்பிற்குரியவர்களே! ஒருவர் மற்றெருவருடன் உடனிருந்து உறவுகளில் நங்கூரமிடுவதே தனிமையை போக்குவதற்கான நல்லவழி. நமது பழக்கவழக்கங்களில், நமது கலாச்சாரத்தில், நமது தமிழ் பண்பாட்டில், ஒவ்வொரு திருவிழாக்களில் எல்லா குடும்பங்களும் ஒன்றிணையும். அதுபோல நமது கத்தோலிக்க வழிபாட்டு முறைகளும், திருவருட்சாதனங்களும் நாம் ஒருவர் மற்றொருவரை இணைப்பதாகவே இருக்குமே ஒழிய தனிமையில் ஒருவர் பெறும் திருவருட்சாதனமாக இருக்காது. அப்படி தனியாய் பெறுகிற திருவருட்சாதனமாக இருந்தாலும், அது மீண்டும் நம்மை குடும்பத்தோடு இணைக்கிற திருவருட்சாதனமாய் மாறும். திருச்சபை எனும் குடும்பத்தோடு இணைக்கிற திருவருட்சாதனமாக மாறும்.
அன்பிற்குரியவர்களே! நாள் ஒருமுறையாவது உங்கள் உறவுகளோடு பேசுங்கள். அந்த உறவுகளை புதுப்பித்துக் கொள்ளுங்கள். மனதில் ஏற்படுகின்ற கஸ்டங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். மகிழ்ச்சியாய் இருக்கும் தருணங்களை நங்கூரமிடுங்கள். “இன்று நான் உண்மையிலே நல்ல மகிழ்ச்சியாய் இருக்கிறேன்”. மீண்டும் மீண்டும் செய்கிற நல்ல உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்வுகள். அதை நான் நல்ல புரிதலோடு செய்கிற அந்த முறை, சுநிநயவநன யஉவழைn யனெ ஐவெநவெழைn. இது இரண்டும் தான் நம் தனிமை உணர்வை அழித்துவிட்டு மகிழ்ச்சியை மலரச் செய்யும். அதைத்தான் திருவருட்சாதனமும் சொல்கிறது. இது வெறும் வெளி அடையாளமாக மட்டும் இருந்துவிட்டால், இந்த திருவருட்சாதனங்கள் பயனற்றதாகிப் போய்விடும். எப்பொழுது அதன் உண்மைத் தன்மையை உணர்ந்து, மகிழ்ந்து, விசுவசித்து பங்கேற்கிறோமோ, அது உண்மையிலே திருவருட்சாதனமாக மாறுகிறது.
“இது நம் வாழ்வில் தொடரட்டும். இறைவன் தனிமையை விரும்பவில்லை, உறவுகளில் உயிர் கொண்டிருக்கிறார்.”

-அருட்பணி. அருள் எட்வர்ட்