பரிசுத்த ஆவியானவர் ஜெபம்

0
6277

திவ்ய இஸ்பிரித்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளிவாரும். பரலோகத்தில் நின்று உம்முடைய திவ்ய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரர்களுடைய பிதாவே, கொடைகளைக் கொடுக்கின்றவரே இருதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தில் சுகமே, வெயிலில் குளிற்சியே, அழுகையில் தேற்றரவே எழுந்தருளிவாரும். வெகு ஆனந்தத்தோடு கூடியிருக்கிற பிரகாசமே உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களின் உற்பணங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதை சுத்தம்பண்னும். உலர்ந்ததை நனையும். நோவாய் இருக்கிறதை குணமாக்கும். வணங்காததை வணங்கப்பண்னும், குளிரோடிருக்கிறதை குளிர் போக்கும். தவறினதை செவ்வனெ நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புன்னியத்தின் பேறு பலன்களையும் நல்ல மரணத்தையும் நித்திய மோட்ச சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. -ஆமென்.

HELP ME HOLY SPIRIT | Family Life Worship Center

புதிய மொழிபெயர்ப்பு:

தூய ஆவியே எழுந்தருள்வீர்,
வானின்று உமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீது அனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய் வந்தருள்வீர்,
நன்கொடை வல்லலே வந்தருள்வீர்,
இதய ஒளியே வந்தருள்வீர்.

உன்னத ஆறுத லானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தன்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வேம்மைத் தணிக்கும் குளிர்நிழலே,
அழுகையில் ஆறுத லானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப் போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்,
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வரட்சி யுற்றதை நனைத்திடுவீர்.
காயப் பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்கா திருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதை குளிர் போக்கிடுவீர்,
தவறிப் போனதை ஆண்டருள்வீர்.

இறைiவா உம்மை விசுவசித்து ,
உம்மை நம்பும் அடியார்க்கு,
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.  – ஆமென்.