புனித செபஸ்தியார்

0
4962

புனித செபஸ்தியாரின் நவநாள்

புனித செபஸ்தியாரின் வரலாறு:

விசுவாசத்தைக் கட்டிக்காக்க வீர மரணமடைந்து, விண்ணுலகப் பேரின்ப வாழ்வை தன் உடைமையாக்கிக் கொண்ட வீரப் பெருமகன் புனித செபஸ்தியார்; பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த நர்போன் நகரில் பிறந்து, இத்தாலியிலுள்ள மிலான் நகரில் வளர்ந்து, வனப்புமிக்க வாலிபனாகத்; திகழ்ந்தார்;.

கிறிஸ்துவுக்குப் பின் சுமார் 283 ஆண்டில் உரோமைப் பேரரசன் கறினுசின் படையில் செபஸ்தியார் சேர்ந்து, சிறந்தது ஒரு படைவீரன் ஆனார். வேதத்திற்காக சிறைக்கூடங்களிலே அடைபட்டு வேதனைபட்டுக் கொண்டிருந்த விசுவாசிகளை சந்தித்தார். அன்பொழுக அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கிறிஸ்துவின் அன்பைக் காட்டி, வீர உரைகளை ஊட்டி விசுவாசத்தில் அவர்கள் நிலைத்து நிற்கச் செய்தார். கிறிஸ்தவர்களுக்குத் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல் புரிந்த அவர் தனது உயர் பதவியையும், உடைமைகளையும் பெரிதென எண்ணவில்லை.

சிறையில் வேதனையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மாற்குஸ், மார்செல்லியானுஸ் என்ற இரு சகோதரர்கள் வேதவிசுவாசத்தில் தத்தளித்துக் கொண்டிருந்ததை அறிந்த செபஸ்தியார், அவர்;கள் இருந்த சிறைக்கு விரைந்து சென்று விசுவாசத்தில் அவர்கள் நிலைத்து நிற்கும்படி செய்தார். இந்த நேரத்தில், அங்கு நின்று கொண்டிருந்த சோயே என்னும் ஊமைப் பெண், புனித செபஸ்தியாரின் பாதங்களைப்பற்றி ஆறு ஆண்டுகளாக பேசாமடந்தையாக இருக்கும் தனக்கு பேசும் வரத்தைப் பெற்றுத் தருமாறு வேண்டினாள். புனிதரும் மனமிரங்கி அவளது வாயின்மேல் சிலுவை அடையாளம் வரையவே, அவளது வாயும் திறக்கப்பட்டு முன்பு போல் அவள் பேசத் தொடங்கினாள். புனிதர் தனக்கு வழங்கிய நன்மைக்கு நன்றிக்கடனாக அவளும் அவளது கணவரான நிக்கோஸ்கிராத்துஸ் என்பவரும் மனம்மாறி கத்தோலிக்கத் திருமறையைத் தழுவினார். தவிர மாற்குஸ், மார்செல்லியானுஸ் இவர்களின் மனைவி மக்களும், பெற்றோரும், சிறைக்காவலனான குளோத்தியுஸ் என்பவனும் மற்றும் பதினாறு பேர்களும், மதம் மாற விரும்பி சிறை அதிகாரியான நிக்கோஸ் கிராத்துஸின் உதவியுடன் போலிகார்ப் என்னும் பரிசுத்த குருவை அணுகி, வேத விளக்கமும் பெற்று ஞானஸ்நானம் பெற்றனர்.

உரோமைப் பேரரசன்  கிரோமாசியுஸ் தன் சிறை அதிகாரியான நிக்கோஸ்கிராத்துஸ் ஞானஸ்நானம் பெற்றதன் காரணமாக அவனுக்கு இருந்த சூலைநோய் குணமடைந்ததை கேள்வியுற்று, அவனைப் போல் தானும் குணம் அடைய கத்தோலிக்க மறையைத் தழுவ எண்ணங்கொண்டு மறையைப்பற்றி கண்டுணர விரும்புவதை அறிந்த செபஸ்தியார் அவனிடம் சென்று, அவனுக்கு திருமறை விளக்கமளித்து அவனது பிணியை அகற்றி அவனுக்கும் அவனது மைந்தனுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார்.

பேரரசர் தான் பெற்ற உடல்நலத்தின் நன்றிக்கடனாக சிறையில் அடைபட்டுக்கிடந்த கிறிஸ்தவர்களை உடனடியாக விடுவித்ததுமன்றி, தனக்கு அடிமைகளாயிருந்த 1400 புதுக்கிறிஸ்தவர்களையும் விடுவித்து தானும் மனது அரசுக்கட்டிலை விட்டு இறங்கினான்.

283 இல் தியோக்கிளேசியன் உரோமைப் பேரரசனானான் புனித செபஸ்தியாரின் நற்பண்புகளையும், நெஞ்சுறுதியையும் கண்டு அவரை தனது மெய்காப்பாளராக்கினான். உரோமையெங்கும் வேதகலாபனை பற்றிப்படர்ந்து பயங்கர விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த  வேளையில், கிறிஸ்தவர்களை பேரரசரிடமிருந்து மீட்க வல்லவர் புனித செபஸ்தியாரே என்றனர். கிறிஸ்தவர்கள் திருச்சபையின் தலைவராயிருந்த காய்யுஸ் என்னும் பாப்புவிடம் செபஸ்தியார் நேரில் சென்று அந்த புனிதப் பணிக்கு தன்னையே அர்ப்பணித்து நின்றார். ஆனால் பாப்பு, போலிகாhப் என்ற குருவை அனுப்பி, புனிதரை பேரரசரின் மெய்காப்பாளராக இருந்து கொண்டே கிறிஸ்தவர்களுக்காகப் பேராடுமாறு கேட்டுக்கொண்டார்.

286 இல் வேதகலாபனை உச்சக்கட்டத்தை அடைந்தது. பாப்புவும், சில கிறிஸ்தவர்களும் அரண்மனைக் காவலன் ஒருவனின் வீட்டில் மறைவாயிருந்தனர். பேசாமடந்தையாயிருந்து பின் செபஸ்தியாரால் பேசும் வரம் பெற்ற சோயே என்பவளை கிறிஸ்தவ எதிரிகள் நெருப்பில் போட்டு சுட்டெரித்தனர். அதைத் தொடர்ந்து  மாற்குஸின் தந்தை திறங்குலினுசும் கல்லால் எறியப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார். நிக்கோஸ்கிராத்துஸ், குளோதியுஸ், கஸ்தோரியுஸ், விக்தோரினுஸ் போன்றோரை சித்திரவதைக்குள்ளாக்கி ஆழ்கடலில் தள்ளப்பட்டனர். மாற்குஸ், மார்செல்லியானுஸ் ஆகியோரைப் பிடித்து ஈட்டியால் குத்திக் கொன்றார்கள்.

பேரரசன், புனித செபஸ்தியாரும் ஒரு கிறிஸ்தவர் என்று இறுதியாக அறிந்து அவரைத் தன்முன் அழைத்து, ‘நன்றி மறந்தவன்’ என்ற பழியை அவர் மீது சுமத்தி, அவரைக் கண்டித்தான். அதற்கு அவர், இறைவனை வாழ்த்தி, வணங்கி, அவரது திருவுளத்திற்கேற்பவே தான் நடப்பதாயும், அரசர்களின் சே:ம நலத்திற்காகவே தாம் பாடுபடுவதாயும் செபஸ்தியார் அமைதியாகக் கூறினார்.

இதைக் கேட்ட அரசன் கோபாவேசம் கொண்டு புனித செபஸ்தியாரை தூணில் கட்டி வைத்து அம்பால் எய்து கொல்ல ஆணை பிறப்பித்தான். அவ்வாறே காவலர் அவரை கம்பத்தில் கட்டி இரக்கமின்றி அவர்மீது அம்பால் எய்து அவர் இறந்தார் என்று தவறாக நினைத்து போய்விட்டார்கள். ஆனால் இரேனாள் என்னும் மாது புனிதரை அடக்கம் செய்ய இரவில் வந்து பார்த்தபொழுது அவர் உயிரோடு இருக்கிறாரெனக் கண்டு, வியப்புற்று அவரைத் தன் வீட்டிற்கு இரகசியமாய் அழைத்துப் போனாள். அங்கே அவர் மீண்டும் குணமடைந்தார்.

  கிறிஸ்தவர்கள் அவரை எதிரிகளுக்கு மறைவாயிருக்க மன்றாடிக் கேட்டுக்கொண்டும் அவர் கேளாமல், அரசன் தனது கோவிலுக்கு போகும் வழியில் நின்று, ‘பேரரசரே! கிறிஸ்தவர்கள் மீது கோள் சொல்லும் புரட்டர்களின் வார்த்தைகளைக் கேட்டு நீர் மதியை இழக்கலாமா? கிறிஸ்தவர்களைவிட உமக்கு பிரமாணிக்கமுள்ள ஊழியர்கள் இல்லையென்றும் அவர்களுடைய வேண்டுதலால் உமக்கு நன்மையே அதிகம் கிடைத்திருக்கிறதென்றும் அறிவீர்’ என்றார்.

மமதைக் கொண்ட மாமன்னன் தியோக்கிளேசியான் தான் அம்புகளுக்கு இரையாக்கிய மனிதன் தன்முன் நிற்பதைக் கண்டு விழித்து ‘அம்புகளால் எய்துகொல்ல நாம் அனுப்பின செபஸ்தியான் நீதானா?’ என்றான்.

  இவ்வாறு கூறியதைக் கேட்ட அரசன் வெகுண்டெழுந்து, செபஸ்தியாரை தடிகளால் அடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான். அப்படியே புனித செபஸ்தியார் கி.பி.288 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாளில் அடிக்கப்பட்டு மரித்து மோட்ச முடிபெற்றார். புனிதரின் காட்சியில் எச்சரிக்கப்பட்ட லூசினாள் என்பவள் புனிதரின் திருவுடலை இரகசியமாக எடுத்து வந்து, புனித இராயப்பர் சின்னப்பர் கல்லறை வாசற்படியின் அருகில் அடக்கம் செய்தாள்.

வாழ்க, புனித செபஸ்தியாரின் புகழ்!!

புனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம்
அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ஆறுதல் செய்யவும் வேதசாட்சி முடிபெறவும் போர்ச்சேவகரான புனித செபஸ்தியாரே, என்பேரில் இரக்கமாயிரும். ஆகாதவனுடைய மரணத்தை விரும்பாமல், அவன் குணப்பட விரும்பும் சர்வேசுரன்; பாவிகள் மனந்திரும்பவும், நீதிமான்கள் பரிசுத்தப்படவும், வைசூரி, பேதி  பெருவாரியான காய்ச்சல் முதலிய வியாதிகளை அனுப்பினாலும், சிலவிசை முன் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே உபத்திரப் படுகிறவர்களுடைய துன்பநாளில் அவர்களுக்கு ஆறுதலை கட்டளையிடுகிறாரென்று நான் அறிந்திருக்கிறபடியால் இந்த வியாதியில் உமது சகாயத்தைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபுரியில் உம்முடைய பேரால் பீடம் எழுப்பியபின் வி:க்காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன்.

தியோக்கிளேசியான் அரசனுக்குப் பயப்படாமல் பெரிய வேதசாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த உபத்திரவமான வியாதியில் என்னைக் கைவிடாதேயும். ஏன் பாவங்களுக்காக வந்த நோயை நான் பொறுமையோடே பொறுக்க வேண்டியதுதான், சுவாமியின் கைப்பாரம் என்மேல் சுமத்தப்பட்டது நானோ வெகுபலவீனன், காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலிருக்கிறேன். கடலில் கிடக்கும் துரும்புபோல் தத்தளிக்கிறேன். தேவனுடைய கோபத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் குடிக்க வேணுமென்று சர்வேசுரன் மனதாயிருக்கிற இந்த துன்பப்பாத்திரத்தை நான் வீரம் பொருந்திய பொறுமையோடு குடிக்க எனக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ளும். என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே சர்வேசுரன் என்னைத் தண்டிக்கிறார். காயப்படுத்துகிறவரும், குணமாக்குகிறவரும் அவரேதான். நல்ல நாளில் சர்வேசுரனை நேசிக்கிறது போல துன்ப நாளிலும் அவரைச் சிநேகிக்கக் கடவேன். நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதபடிக்கு, இந்த கசப்பான பாத்திரத்தை சந்தோசமாய் , அவர் திருக்கரத்திலிருந்து வாங்கிக் குடிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை பெற்றுத் தந்தருளும்.

ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மனுமக்களை மறவாத சர்வேசுரன் வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய வியாதிகளையும், தந்திரம், போர், பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் பட்சத்தினால் வரவிடுகிறார் என்று நாங்கள் அறிந்திருந்தும் ஏன் அவர் பேரில் முறைப்படுவேன்? ஆகையால் புனித செபஸ்தியாரே! இந்த வியாதி சீக்கிரம் குணமாகச் சர்வேசுரன் சித்தமாயிராவிட்டால், நான் அதை நல்ல மனதோடு பொறுக்க எனக்குத் தைரியத்தையாகிலும் தர மன்றாடும். என் பாவங்களின் பரிகாரத்துக்காக இன்னும் அதிக நோய்களும், துன்பங்களும் வரவேண்டுமென்று நான் ஆசிக்க வேண்டியதுதான். ஆர்ச்சிய:;டவர்களே துன்பதுரித நோய்களை ஆசித்திருக்கப் பாவியாகிய நான் நித்தய பாக்கியமடைய நோய் வருத்தங்களை ஆசிக்காமலிருக்கக் கூடுமோ? ஆனால் புனித செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், புண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவரீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். – ஆமென்.

புனித செபஸ்தியாருக்கு 7 மன்றாட்டு

  1. பிதாவின் சித்தத்தினாலே உயர்ந்த குடும்பத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து எண்ணிலடங்காத புண்ணிய நன்மைகளைச் செய்து வேதத்துக்காகத் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக படையில் சேவை செய்தவரான புனித செபஸ்தியாரே, சத்திய திருச்சபையார் எல்லாரையுஞ் சகல பொல்லாப்புக்களிலே நின்று, சர்வேசுரன் இரட்சித்தருள வேணுமென்று பரமகர்த்தர் சந்நிதியில் நீர் மன்றாட வேண்டுமென்று உம்மைப் பார்த்து பிரார்த்தித்துக் கொள்கிறோம் -பர, அருள், பிதா.
  2. ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் அநேக அஞ்ஞான இராஜாக்களுக்கும் பிரபுக்களுக்கும் சத்திய வேதத்தை பிரசங்கித்து புத்திமதி சொன்னவரான புனித செபஸ்தியாரே, உலகெங்கிலும் பசாசின் ஆராதனை ஒழித்து எல்லோருஞ் சத்திய வேதம் அறிந்து, ஞான தீட்சை பெற்று, திருச்சபைக்கு உள்ளாகத் தக்கதாக, நீரே சர்வேசுரனை மன்றாடும்படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
  3. புனித பாப்பானவருக்கு மிகவும் பிரியமும், ஆறுதலும் அகமகிழ்வும் உரோமாபுரி முதலிய இராச்சியங்களில் வி:நோய் முதலானவைகளை நீக்கியவரான புனித செபஸ்தியாரே, இந்நேரங்களில் கிறிஸ்துவர்களுக்குள்ளே பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலான வியாதிகளில்லாமல் காப்பாற்றி இரட்சித்தருள வேணுமென்று, நீரே எங்களுக்காக பரம கர்த்தரை வேண்டிக்கொள்ளும் பொருட்டு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
  4. சர்வேசுரனுக்குப் பிரியமாகவும், வேதத்துக்காக துன்பப்படுகிற விசுவாசிகளுக்கு  உதவியாகவும், வியாதிக்காரருக்கு தேவகிருபையால் ஆரோக்கியங்கொடுத்த புனித செபஸ்தியாரே! கிறிஸ்தவர்களுக்கு வி:பேதி, வாந்தி, வைசூரி, வியாதியில்லாமல் பரமகர்த்தர் தற்காத்து இரட்சித்தருள வேணுமென்று தேவகிருபை சிம்மாசனத்தில் மன்றாட உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
  5. பூலோகமெங்கும் சுகிர்த நாமம் உடைத்தானவருமாய், சத்திய திருச்சபைக்குத் தஞ்சமுமாயிருந்த புனித செபஸ்தியாரே, திருச்சபைக்கு விரோதம் செய்கிறவர்களுக்கு சர்வேசுரன் நல்ல மனதைக் கொடுத்தருளும். இந்த இராச்சியத்துக்கு வேண்டிய சத்திய சற்குருக்களுண்டாகி ஈடேற்ற நெறியில் எங்களை நடப்பிக்கவும் சர்வேசுரனை மன்றாடும் படிக்கு உம்மை பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
  6. உலக மகிமை, பெருமை, புகழ், செல்வமெல்லாம் வெறுத்து இயேசுநாதரைப் பற்றிப் பிராணனைத்தர, அத்தியந்த விசுவாசத்துடனே மாற்கு மார்செல்லியனுக்கு புத்தி சொல்லும் போது ஏழு சம்மனசுகளுடன் இயேசுநாதர் வந்து உம்மை முத்தி செய்து நம்மோடுகூட இருப்பாயென்று சொல்லக்கேட்டு சந்தோ:மடைந்த புனித செபஸ்தியாரே, நாங்களெல்லோரும் பாவமில்லாமல் புண்ணிய வழியிலே காங்கோபாங்கமாய் நடந்து பேரின்ப மோட்ச இராச்சியத்திலே சேர்ந்து கர்த்தரிடத்தில் அத்தியந்த கிருபை பெறத்தக்கதாக நீரே அவரை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா
  7. உரோமாபுரி தியோக்கிலேசியன் என்ற இராயனால் அநேகம் அம்புகளால் எய்யவும், சாட்டை, கசை பெருந்தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டு மோட்ச இராச்சியத்திலே சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேதசாட்சி முடிசூட்டப்பட்டு, உமது திருச்சரீரத்தை அப்போஸ்தலர்களான புனித இராயப்பர் சின்னப்பர் கல்லறைக்கருகே அடக்கஞ்செய்யப்பட்ட புனித செபஸ்தியாரே, திருச்சபையாரெல்லாம் சர்வேசுரனுடைய சித்தத்துக்கேற்ப நடக்கத்தக்கதாகவும் சகல வியாதிகளிலும் எங்களை விலக்கி இரட்சிக்கத்தக்கதாகவும், உமது வேண்டுதலின் பலன் எங்களுக்கு கிடைக்கத்தக்கதாகவும், நீரே சர்வேசுரனை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.- பர, அருள், பிதா.

முதல்: இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத்தக்கதாக.

துணை: புனித செபஸ்தியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:
கிருபை தயாளம் நிறைந்த சர்வேசுரா சுவாமி! உமது அதி உன்னதமான மகிமை பெற்ற புனித செபஸ்தியார், உமக்காக பட்ட பிரயாசங்களை தேவரீர் பார்த்து அவர் சிந்தின உதிரம் எங்கள் ஆத்தும சரீர நோய்களுக்கு சரியான் ஒள:தமாகத் திருவுளமானீரே, அவரது பேறுபலன்களை பார்த்து எங்கள் ஆத்தும வியாதியிலும், சரீரத்திலும் உண்;டாகிற சகலவித வருத்தங்களிலும், வைசூரி, வி:பேதி முதலிய தொத்து வியாதிகளிலும் நின்று நிவாரணமாக்கியருள வேணுமென்று இந்த ஏழு மன்றாட்டுக்களையும் குறித்து உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் சுவாமி -ஆமென்.

புனித செபஸ்தியாருக்கு புகழ்மாலை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்;தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா,
எங்களை. . . . .
இஸ்பீரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை. . . .

வேதசாட்சிகளுக்கு இராக்கினியான புனித மரியாயே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உயர்ந்த குடும்பத்தில் பிரதாப மகிமையான புனித செபஸ்தியாரே,
உமது பிறப்பினால் நற்போன் பட்டணத்தை முக்கியப்படுத்தின புனித செபஸ்தியாரே. . .
இத்தாலி தேசத்தில் அதிசயப்புண்ணிய பிரகாசத்தினால் விளங்கியவரே. . . .
வேதத்துக்காகத் துன்பப்பட்ட விசுவாசிகளுக்கு ஆதரவாயிருக்கப் படையில் சேவித்தவரே. . . .
அஞ்ஞான இருளில் ஞானக்கதிரால் பிரகாசித்தவரே. . .
தரித்திரர்களுக்கு உதார தகப்பனாரே. . .
நிர்ப்பந்தங்களுக்குள் தத்தளித்த வேதசாட்சிகளுக்குப் புத்திமதி சொல்லித் திடப்படுத்திப் பிரகதியில் சேர்பித்தவரே. . .
ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் வேத சத்தியங்களைப் பிரசங்கித்தவN;ர,
அநேக  அற்புதங்களால் இயேசு கிறிஸ்துவினுடைய வேத விசுவாசத்தை விளங்கப் பண்ணினவரே. . . .
வாக்கினாலும் கிரிகையினாலும் வல்லவராயிருந்தவரே. . .
சத்தியத்துக்காக உபத்திரவப்பட்டவர்களுக்கு மிகுந்த தைரியத்தை வருவித்தவரே. . . .
வேதசாட்சிகளுக்குத் தங்கள் சோதனைகளிலும் மரணவேளையிலும் பலமும் தேற்றரவுமாயிருந்தவரே. . . .
திடமான விசுவாசத்தினாலும் சுகிர்த ஒழுக்கத்தினாலும் யாவருக்கும் நல்ல மாதிரிகையாயிருந்தவரே. . .
பக்தி நிறைந்த வாக்கியங்களாலும் அநேகர் இருதயத்தில் தேவ சிநேக அக்கினியை மூட்டி வளர்த்தவரே. . .
அஞ்ஞானிகளான அநேகருக்குச் சத்தியத்தை தெளிவித்து ஞான தீட்சை பெறுவித்தவரே. . . .
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பேர்பெற்ற பெரிய உத்தியோகஸ்தர்களை முதலாய் சத்திய திருச்சபையில் சேர்ப்பித்தவரே. . . .
அதிசயமான சகல புண்ணியங்களிலும் தைரிய வீரசூரத்திலும் அதிகரித்தவரே. . .
விசுவாசிகளுக்கு உதவியாக, சக்கரவர்த்தி, உரோமாபுரி இராயனிடத்தில் சேனை தலைவராக உயர்த்தப்பட்டவரே. . .
சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் மிகவும் பிரியப்பட்டவரே. . .
சத்திய திருச்சபைக்குத் தஞ்சமானவரே. . .
அர்ச். பாப்பானவருக்கு மிகவும் ஆறுதலும் அகமகிழ்ச்சியுமாயிருந்தவரே. . .
சிலுவை அடையாளத்தில் திமிர்வாதத்தை நீக்கினவரே. . .
ஊமையைப் பேசவைத்தவரே. . .
அநேக  வியாதிகளை அதிசயமாகத் தீர்த்து ஆரோக்கியம் தந்த உத்தம வைத்தியரே. . .
எண்ணப்படாத புண்ணிய நன்மை அற்புதங்களைச் செய்தவரே. . .
பசாசுக்களுக்குப் பயங்கரமான சாட்டையாய் இருந்தவரே. . .
உலகம் பசாசு சரீரத்தின் தந்திரங்களையெல்லாம் ஜெயித்தவரே. .
பாளையத்திலும் அழியாத கற்பினால் விளங்கியவரே. . .
அத்தியந்த விசுவாசத்திடனை உடையவரே. . .
இடைவிடாமல் தேவசிநேக அக்கினியால் எரிந்த ஞானச்சூளையே. .
உலக மகிமை பெருமை ஆஸ்தி சுகமெல்லாம் புறக்கணித்தவரே. .
இயேசுநாதருடைய சிநேகத்துக்காக இராயனுடைய சிநேகத்தையும் அவன் தந்த மேலான உத்தியோகங்களையும் இழந்தவரே. . .
இயேசுநாதரைப்பற்றிப் பிராணனைத்தர மிகவும் அபேட்சித்தவரே. . .
சத்திய வேதத்தை அனுசரித்ததைப் பற்றி இராயனால் மரணத்தீர்வை இடப்பட்டவரே. . .
திரளான அம்புகளால் எய்யப்பட்டவரே. . .
அம்புகளால் ஊடுருவப்பட்டு மரித்தவராக எண்ணி விடப்பட்டவரே. .
உயிர் பிழைத்து மறுபடியும் அதிசய தைரியத்துடன் இராயன் முன்னிலையில்  போய் கிறிஸ்தவர்களை வாதித்த அநியாய குரூயஅp;ரத்தைக் கண்டித்தவரே. . .
குரூயஅp;ரம் மாறாத இராயன் கட்டளையால் சாட்டை கசைகளையும் பெருந்தடிகளையும் கொண்டு கொல்லப்பட்டவரே. . .
எவ்வித  நிர்ப்பந்தத்துக்கும் அஞ்சாத வேதசாட்சியே. . .
விசுவாசத்தில் ஒருபோதும் தத்தளியாத வேதசாட்சியே. . .
உமது இரக்கத்தால் கிறிஸ்து வேதத்தை மெய்ப்;பித்த உத்தம வேதசாட்சியே. . .
மிக தைரிய சந்தோ:த்துடனே வேதத்துக்காக பிராணனைக் கொடுத்தவரே. . .
தரிசனையில் ஏவுதலைப் பெற்ற ஒரு புண்ணிய தலைவியால் மிகுந்த பூச்சியத்துடன் அடக்கம் பண்ணப்பட்டவரே. . .
மோட்ச இராச்சியத்தில் சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேத சாட்சி முடி சூட்டப்பட்டவரே. . .
வேதசாட்சிகளுக்குள் விசே: மகிமைப்பிரதாபத்துடனே பிரகாசித்தவரே. . .
உமது மன்றாட்டின் உதவியால் உரோமாபுரி முதலிய பட்டணங்களினின்று கொள்ளைநோய் பெருவாரிக்காய்ச்சல் நீங்கினதால் மிகவும் பேறுபெற்றவரே. . .
பூலோகமெங்கும் சுகிர்தவாசம் பரிமளிக்கிற நாமமுடைத்தானவரே,
சகல  கிறிஸ்தவர்களுக்கும் தயை நிறைந்த தகப்பனாரே. . .
வைசூரி முதலிய வியாதி துன்பத்தில்p ஆதரவும் அடைக்கலமுமாயிருந்தவரே. . .

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே. . .
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் . . .எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப். . .எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மு: இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு
நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.

து: புனித செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக
சர்வ வல்;லபமுள்ள சர்வேசுரா சுவாமி! எங்கள் இக்கட்டுகளையும் பலவீனங்களையும் கிருபையுடனே பார்த்து அடியோர்கள் செய்த பாவங்களின் கனத்தினால் எங்களுக்கு வந்திருக்கிற துன்ப துரித வருத்தங்களின் பேரில் சித்தமிரங்கி புனித செபஸ்தியாருடைய வேண்டுதலினால் எங்களுக்கு வேண்டிய ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும்படியாக கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.       –  ஆமென்.