இறைஇரக்கத்தில்..

0
2012

நம் வாழ்வின் பயணம்.
“மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலே எல்லாம் ஆகிறது.” (உரோமையர் 9-16)
ரொனால்டு வேலை பார்ப்பதற்காக 2016ஆம் ஆண்டு ஜீலை மாதம் துபாய்க்கு வந்து வேலையில் சேர்ந்தார். அவர் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் சரியான வேலையும் இல்லாமல், அதற்கான சம்பளமும் இல்லாமல் ஒருவருடம் உருண்டோடியது. அவருடைய துபாய் விசா பாஸ்போர்ட்டில் அடிக்கப்படவில்லை. அதே சமயம் அந்த நிறுவனம் விசாவை ரத்து செய்தும் கொடுக்கவில்லை. இதனால் அவர் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல், ஊருக்கும் போக முடியாமல் மிகுந்த வேதனைக்கு உள்ளானார். விசா காலவதிக்குப் பின்பும் துபாயில் தங்கியதற்கான அபராதத்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து 45,000.00 திர்காம்-ஐ எட்டியது. இப்படியாக இரண்டரை வருடம் கடந்தது. அவரிடம் இறைஇரக்கத்தின் பக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சரியாக 2.50 மணி அளவில் இறைஇரக்கத்தின் செபமாலை நாள் தவறாமல் மிகுந்த விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் சொல்லிக் கொண்டிருந்தார்.
இன்று அவர் கடவுளின் இரக்கத்தின் சாட்சியாக நிற்கின்றார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக எந்த அபராதத்தொகையும் செலுத்தாமல், அவர் நல்லபடியாக ஊருக்குச் சென்று குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடவுளின் இரக்கம் நம் எல்லோர் பேரிலும் தாராளமாக இருக்கின்றது. அந்த இரக்கத்தின் செபமாலையை நாமும் நம் குடும்பங்களும் சேர்ந்து செபித்து கடவுளின் இரக்கத்தில் வாழ்வோம்.

– திருமதி மெற்றில்டா லியோ.