– திருமதி ராணி ஆனந்த்.
வாழ்வு என்ற சொல்லின் உள்அர்த்தம் “விழுதலும் – எழுதலும்” விழுதல் இன்றி எழுதல் எப்படி நடைபெறும்? விழுதலை விளக்கும் சொல்லே ஆன்மீகம்.
1. ஒரு விதை விழ ஒரு மரம் எழும்.
2. ஒரு சொட்டு நீர் விழ ஒரு செடி முளைக்கும்
3. ஒரு கருத்து நம் மனதில் விழ அறிவாக எழும்.
எங்கும் எதிலும் விழுதல் நடந்தாலே எழுதல் நடக்கும். விழுதலை வாழ்வாக கொண்ட மரியாளும், வியாகுலமும் பரிக்க முடியாத ஒன்று.
வியாகுலம் ஒரு வரலாறு:-
வியாகுலம் என்ற கருத்தின் பிரதிபலிப்பே சிற்பி மைக்கில் ஆஞ்சலோ உருவாக்கிய பீட்டா (pநைவய) என்ற வியாகுல அன்னையின் சிலை. பீட்டா (pநைவய) என்றால் ‘நல்ல உதாரணம்’ என்று பொருள். மனித உணர்வையும் அதனுள் பொதிந்து கிடக்கும் ஆன்மீக உணர்வையும் வெளிப்படுத்தும் இந்தச் சிலை 1964 ஆம் ஆண்டு புனித ஆண்டாக அறிவிக்கப்பட்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அருங்காட்சியக நிகழ்வில், வியாகுல அன்னையின் சிலை உலக நாடுகளின் மிக அழகிய, கருத்தாழம் மிக்க, வாழ்க்கையை பிரதிபலிக்கும் சிலையாக, ஐக்கிய நாடுகளின் சபையின் அங்கமான யுனஸ்கோ-வால் அறிவிக்கப்பட்டு, உலகநாடுகளின் பொது கலைச்சொத்தாக பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது 2,10,00,000 பேர் அதைப் பார்வையிட, உலகை வியக்க வைக்கும் ஏழு சிலைகளில் இது முதன்மையானது என்பது நமக்குப் பெருமை.
வியாகுலம் ஒரு ஆன்மீகம்:-
அன்னை மரியாள் வெளிப்படுத்திய பல்வேறு ஆன்மீகங்களில், இறைவனை நோக்கி நம்மை ஈர்க்கும் ஆன்மீகம், அதாவது கலங்குவதும் கரைசேர்வதும்’. வியாகுலம் என்ற தமிழ் சொல்லுக்குக் கலங்குவது என்று பொருள். “வேகு லா’ என்ற பிரஞ்சு மொழி சொல்லுக்கு கரைசேர்ப்பவள், தைரியமுள்ளவள் என்று பொருள். இத்தாலி மொழிச் சொல்லும் இதே பொருளைக் கொடுக்கிறது. ‘வோக்’ (எழபரந) என்ற ஆங்கிலச் சொல்லும் துன்பத்தில் இணைக்கப்படுதல் என்ற பொருளைச் சொல்கிறது. மேலும் ‘வோக்’(எழபரந) என்பது பல மொழிகளிலுள்ள ஒரு ஒலியாக நிற்கிறது. ஒலி என்பது நம் செவியில் பட்டு மனதில் போய் நிற்பது, எனவே வியாகுலம் என்னும் ஒலியும் நம் செவியில்பட்டு மனதில் நிற்பது, மேலும் நம் வாழ்வில் இருக்கிறது. நம்முடைய வியாகுல அன்னையின் சுரூபம் காட்சிக்கு நம்மை வருத்தினாலும் நம் வாழ்கைக்கு அர்த்தம் சொல்லும் சுரூபமாக இருக்கிறது. அதாவது, ‘கலங்கி நின்று கரைசேர்வது’ மேலும் கடவுளைச் சென்றடைவது. இதுவே வியாகுல பயணம்.