கணவரின் ஆசீர்வாத வாழ்விற்கான ஜெபம்
1) நீதிமொழிகள் 8 :17 ம்
பிதாவே! என் கணவர் உம்மை ஆவலோடு தேடுகிற பிள்ளையாய் மாற்றும்.
2) நீதிமொழிகள் 8:34
தேவனே! என் கணவர் உன் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்பாய் நின்று உன் கதவு நிலை அருகில் உமக்கு செவி கொடுக்கின்ற பிள்ளையாய் மாற்றும்.
3) நீதிமொழிகள் 4:20
பிதாவே! என் கணவர் உன் வார்த்தைகளை கவனித்து உன் வசனங்களுக்கு செவிசாய்த்து ஆவிக்குரிய வாழ்வில் வளரச்செய்யும்.
4) நீதிமொழிகள் 3:5
என் கணவர் தன் சொந்த அறிவாற்றலை சார்ந்து நில்லாமல் முழு இதயத்தோடும் உம்மில் நம்பிக்கையாயிருந்து தன் வழிகளில் எல்லாம் உம்மை நினைக்கச் செய்யும்.
5) நீதிமொழிகள் 10:9
பிதாவே! என் கணவர் கோணலான வழிகளில் நடவாது நாணயமான பாத்திரமாய் நடந்திட உதவும் ஆமென்.
6) நீதிமொழிகள் 5:13
பிதாவே! கற்பித்தவர்களின் சொல்லை என் கணவர் கேட்டு தனக்கு போதிப்பவர்களுக்கு தன் செவியை சாய்க்க செய்யும்.
7) நீதிமொழிகள் 24:16
தேவனே! என் கணவர் ஏழு முறை விழுந்தாலும் எழுந்து நிற்க உதவும்.
8) நீதிமொழிகள் 22:11
தேவனே என் கணவர் சுத்த இருதயத்தை விரும்புகிறாய் மாற்றும்.
9) நீதிமொழிகள் 3:1,2
என் கணவர் உமது அறிவுரையையும் கட்டளைகளையும் மறவாது கடைபிடித்து, நீண்ட ஆயுளையும் நிலையான நலன்களையும் பெற்றிட உதவும்.
10) நீதிமொழிகள் 3:4
பிதாவே! என் கணவர் உமக்கும் மனிதருக்கும் உகந்தவராய் நல்ல எண்ணத்தை தாரும்.
11) நீதிமொழிகள் 8:35
தேவனே! என் கணவர் உம்மைத் தேடி கண்டடைந்து உமது கருணையையும் இரக்கத்தையும் பெறச்செய்யும்
12) நீதிமொழிகள் 3:33
தேவனே! என் கணவர் உமக்கு அஞ்சி நடப்பவராய் மாற்றி எங்கள் உறைவிடங்களை ஆசீர்வதியும்.
13)நீதிமொழிகள் 19:11
தேவனே! என் கணவர் கோபத்தை அடக்கும் விவேகத்தையும் பிறர் குற்றத்தை மன்னிக்கும் கிருபையையும் தாரும்
14) நீதிமொழிகள் 19:27
பிதாவே! என் கணவர் அறிவை தரும் வார்த்தைகளை விட்டு விலகச் செய்யும் எந்த போதனைகளையும் கேட்காதபடி நீர் அவரை தடுத்திடும்.
15) நீதிமொழிகள் 20:18
தேவனே! நல்ல ஆலோசனைகளால் என் கணவரது எண்ணங்களை பலப்படுத்தும் நல்ல யோசனை செய்து தன் போரில் வெற்றி பெற உதவும்
16)நீதிமொழிகள் 23:15
தேவனே! உமது இருதயம் மகிழும்படி என் கணவரின் இருதயம் ஞானம் உள்ளதாய் இருக்கச் செய்யும்
17) நீதிமொழிகள் 15:6
தேவனே! என் கணவருடைய வருமானத்தில் துன்பமில்லாத படி அவரது வருமானத்தால் எங்கள் வீட்டில் நிறை செல்வம் நிலைத்திட அவரை ஆசீர்வதியும்.
18) நீதிமொழிகள் 28:13
தேவனே! என் கணவர் தன் பாவங்களை மறைக்காமல் அறிக்கை செய்து விட்டு விட்டு உன்னுடைய அருளையும் இரக்கத்தையும் பெற உதவிடும்.
19) நீதிமொழிகள் 16:6
“தேவனே! உமக்கு பயப்படுவதனால் என் கணவர் தீமையை விட்டு விலகி வாழச் செய்யும்
20) நீதிமொழிகள் 10:12
என் கணவருடைய இருதயத்தில் உள்ள பகை, கசப்பின் உணர்வுகளை எடுத்துப்போட்டு அவர் இருதயத்தை உமது தெய்வீக அன்பினால் நிரப்பும்.
21) நீதிமொழிகள் 18:24
தேவனே சகோதரரிளும் அதிக சொந்தமாய் நேசிக்கும் நண்பர்களை என் கணவருக்கு தாரும்.
22)நீதிமொழிகள் 12:17
பிதாவே! என் கணவர் உண்மையையும் நீதியையும் வெளிப்படுத்துகின்ற மனிதராக வாழ செய்யும்.
23) நீதிமொழிகள் 22:7
தேவனே! என் கணவர் கடன் வாங்காது, எவருக்கும் அடிமைபடாது வாழ்ந்திட அருள்புரியும்
24) நீதிமொழிகள் 18:21
பிதாவே! நாவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி வாழ்வின் கனியை சுவைக்க என் கணவருக்கு உதவிடும்.
25) நீதிமொழிகள் 17:27
பிதாவே வார்த்தைகளை அடக்குகின்ற அறிவாளியாய், குளிர்ந்த மனம் உள்ள விவேகியாய் வாழ்ந்திட என் கணவருக்கு எப்போதும் உதவும்.