குடும்ப வாழ்க்கை

0
3267

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். நல்ல குடும்பம் அமைவது கடவுளின் ஆசியும் அருளும் மட்டுமல்ல குடும்பத்தினரும் நல்ல குடும்பம் அமைத்திட முயற்ச்சிக்க வேண்டும்.6 முக்கிய காரியங்களை இக்கட்டுரையில் காணலாம்;

1. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட குடும்பம் (Christ Centered Family)
இயேசுவை மையமாக தலைவராக வைத்திருக்கிற குடும்பம் செழிக்கும். அந்த குடும்பமே உண்மையான குடும்பம். குடும்ப ஜெபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீடு. இயேசுவோடு ஐக்கியம் அந்த குடும்பத்திற்கு இல்லாவிட்டால் அந்தக குடும்பத்தில் சந்தோஷம் சமாதானம் உண்மை நீதி இவைகளுக்கு இடமே இருக்காது. கிறிஸ்துவை மையமாகக் கொண்டு அவரோடு முதல் ஐக்கியம் வைக்க வேண்டும். இயேசுவே இவ்வீட்டின் தலைவர் என்று எழுதி மாட்டி வைத்திருப்போம்.

2. திருச்சபைக்கு முக்கியத்துவம் அளிக்கும் குடும்பம் (Church Priority Family)
இயேசுவோடு ஐக்கியம் வைத்திருக்கும் போது குடும்பம் இயேசுவை மையமாக வைத்திருக்கும். குடும்பம் திருச்சபைக்கு அதாவது விசுவாசிகளோடு கூடிய ஐக்கியத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். விசுவாசிகளின் குடும்பம் அல்லது ஐக்கியமே திருச்சபை எனப்படும். ஆகவே கணவன் மனைவி இருவருமே விசுவாசிகளானதால் இருவருக்கும் முதலாவதாக ஐக்கியம் இருக்க வேண்டும். அதை அதிகமாக பலப்படுத்த வேண்டும். அப்படி செய்வதை விரும்ப வேண்டும். விசுவாசிகளின் ஐக்கியம் ஒரு நபரை கிறிஸ்துவுக்குள்ளாக அதிகமாக வளர உதவி செய்கிறது. அதுமட்டுமல்ல அந்த ஐக்கியம் மூலம் ஒருவருக்காக ஒருவர் கரிசனைப்பட ஜெபிக்க சந்தோஷம் துக்கம் போன்றவறைப் பகிர்ந்து கொள்ள ஆலோசனைகள் பெற இன்னும் பல வழிகளில் உதவி செய்கிறது.

3. கலாச்சாரத்தை கடைபடிக்கும் குடும்பம் (Culture Adopted Family)
தாங்சள் வாழும் சுற்றுப்புற சூழ்நிலைகளை அறியாமல் தாங்கள் மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் போதும். தாங்கள் மட்டும் பரலோகம் சென்றால் போதும் என்ற சுயநலம் உடையவர்களாக இருக்க கூடாது. பாவிகளையே இரட்சிக்க இயேசு கிறிஸ்து உலகில் வந்தார். நோயாளிக்களுக்குத்தான் வைத்தியர் தேவை. அவர் அநேக நேரம் பாவிகளோடு உண்கிறார் தங்குகிறார் பேசுகிறார் என்று பரிசேயர்கள் சதுசேயர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இயேசு அவர்களில் ஒருவராக காட்சியளித்தாலும் சிலுவையில் கள்ளர்கள் நடுவில் அறையப்பட்டாலும் பாவம் அவருக்குள் புகாத பரிசுத்தவானாக வாழ்ந்தார். அவரைப் பின்பற்றும் நாம் ஏன் அவரைப் போல் வாழக்கூடாது? கட்டாயம் வாழலாம். வாழ்க்கையின் மூலமாகவும் வார்த்தையின் மூலமாகவும் இயேசுவை அறிவிக்க வேண்டும். விசுவாத்தில் வேறுபட்டு இருக்க வேண்டும்.

4. புரிந்து வாழும் குடும்பம் – அனுசரித்து வாழ்வதல்ல (understand no adjustment)
குடும்பத்தில் கணவன் மனைவியை சரிவர புரிந்து கொள்ளாமலும் மனைவி கணவனை சரிவர புரிந்து கொள்ளாமலும் தங்களையே அனுசரித்துக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முன் வருவதில்லை. அதைக் குறித்து சிந்திப்பதும் இல்லை. ஏதோ யாரோ என்று எண்ணி தங்களைத் தாங்கள் பொறுததுதக் கொள்கின்றனர். இதற்கு பெயர் பொறுமை அல்ல. கணவன் மனைவி உறவில் பொறுமை அவசியம் தான். ஆனால் அது தங்களை மாற்றிக் கொள்ளாமல் அவர்கள் செய்வதை பொறுத்துக் கொள்வது சரியல்ல. ஏனென்றால் இந்த உறவு சில நாட்களில் பிரியும் உறவோ அல்லது உடைந்து போகும் உறவோ அல்ல. மாறாக அநேக உறவுகளை இணைக்கும் உறவு. அது மட்டுமல்ல இந்த உறவைப் பற்றி பவுல் கணவன் கிறிஸ்து என்றும் மனைவி திருச்சபை என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த இரு உறவிற்குள் பரஸ்பரமாக புரிந்து கொள்ளுதல் இருக்கும் போது அதாவது அவரை நேசிப்பவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது (ரோமர் 8.28). இதற்கு பெயர்தான் சரியான புரிந்து கொள்ளுதல் ஆகும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் வாழ்க்கையே சிறக்கும்.

5. பகிர்ந்து வாழும் குடும்பம் – ஆட்சி செய்வதல்ல (sharing not ruling)
குடும்ப வாழ்ககை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கை. ஒருவரையொருவர் அதிகாரம் செலுத்தம் வாழ்க்கை அல்ல. கணவன் மனைவி உறவும் ஒருவரையொருவர் அதிகாரம் செலுத்தம் வாழ்க்கை அல்ல. கணவன் மனைவி ஒருவரையொருவர் அரசாட்சி செய்வதோ அல்லது அடிமைப்படுத்துவதோ அல்ல. அரசனும் அதிகாரிகளுமே ஆட்சி செய்வார்கள். அவர்கள் சொல்வதற்கு எதிர்பேச்சே இல்லை. சொல்வதை அப்படியே செய்ய வேண்டும். ஆனால் குடும்ப வாழ்வில் அப்படியல்ல. கணவன் தன் எண்ணம் சித்தம் திட்டம் ஆகியவற்றை மனைவியுடனும் மனைவி தன் எல்லாவற்றையும் கணவனிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தன்னிச்சையாக செயல்பட அவர்கள் இருவர் அல்ல. ஒருவர். இவர்களை எந்த சக்தி பிரித்தாலும் அது தீய சக்தியேயாகும். இயேசு தன் சீஷர்களை சிநேகிதர்கள் என்றழைத்தார். சிநேகிதர்களுக்குள் ஒளிவு மறைவு இருக்காது. அப்படிப்பட்ட ஒளிவு மறைவு இல்லாத ஒரு வாழ்க்கை கணவன் மனைவிக்கு இடையே இருக்க வேண்டும். அது வெற்றியடைவதற்கு ஏற்ற பெலனாக அமைகிறது.

6. பரலோக வாழ்வாகிய குடும்பம் – உலக வாழ்க்கை அல்ல (Heavenly life not worldly life)
இந்த உலகில் பரலோக சந்தோஷத்தை அனுபவிக்கக்கூடிய இடம் குடும்பம். கணவன் மனைவி உறவு இருவரும் ஒரு உடல் ஒரு மனம் இவர்களுடன் கிறிஸ்து மூவரும் கூடும் இடம் பரலோகமாக மாறுகிறது. அவர்களின் ஐக்கியம் பரலோக சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நாம் பரலோகத்திற்கு செல்ல குடும்ப வாழ்க்கை பல வழிகளில் உதவி செய்கின்றது. ஆகவே இது உலகத்திற்கான உலக வாழ்ககை அல்ல. பரலோகத்திற்க்காக பரலோக சந்தோஷத்தை அனுபவிக்கும் வாழ்க்கை.

Bro.அருள்திரு சி. இராஜசேகரன்