பாவசங்கீர்த்தனம் செய்யும் முறை

0
25700

முன்தயாரிப்பு ஜெபம்:
மூவொரு இறைவா, நான் பாவி எனது சொல், செயல் சிந்தனைகளால் உமதன்புக்கும், பிறர்அன்புக்கும் எதிராகவும் எனது உடலுக்கும் ஆன்மாவுக்கும் எதிராக பாவங்கள் பல செய்தேன் என் மீது இரங்கும். நான் செய்த பாவங்கள் அனைத்தையும் உணர்த்தி எனக்கு மெய்யான மனதுருக்கத்தைத் தாரும் என்று இறைவனின் கிருபைக்கு மன்றாடுக.
இறைவா! உமது கிருபையினால் இனிமேல் பாவம் செய்யாதிருக்க தீர்மானிக்கிறேன் என்ற திடமான மனஉறுதியுடன்

(குருவிடம் வந்து முழந்தாளிட்டு)

• சுவாமி நான் பாவி, என்னை மன்னியுங்கள்.
• நான் பாவசங்கீர்த்தனம் செய்து……நாட்கள் (வாரங்கள், மாதங்கள், வருடங்கள்) ஆகின்றன, என்று கூறி, செய்த பாவங்கள் அனைத்தையும் (ஒன்றையும் மறைக்காமல்) முறைப்படி தெளிவாக அறிக்கையிடவும்.
• எத்தனை முறை என்பதை ஒரு முறை அல்லது இருமுறை அல்லது பல முறை என்று குறிப்பிடுக.
• அனைத்தையும் அறிக்கையிட்ட ‘பின் மேலும் மறந்து போன பாவங்களுக்காகவும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன் என்று கூறி முடிக்கவும்.
• குரு கூறும் அறிவுரைகளையும், பாவப் பரிகாரத்தையும் கவனமாகக் கேட்டபின் மனஸ்தாப உத்தம மந்திரம் சொல்ல வேண்டும்.
• குரு ஆசிர் அளித்தபின்;, அவருக்கு நன்றி கூறி விடைபெறுக.

உத்தம மனஸ்தாப மந்திரம்:
என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர் நீர். என் பாவங்களால் உம்மை மனம் நோகச் செய்துவிட்டேன். ஆகவே, நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொண்டிருக்கிறேன். எங்கள் மீட்பராம் ,யேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக இறைவா….. என் மேல் இரக்கமாயிரும்.