இயேசுவின் நேச இருதயமே! உம் இருதயத்தின் அருள் சுடர் ஒளியிலிருந்து என் விசுவாச ஒளியைப் பெற்று நான் வாழ, என்னை உமக்கு நிரந்தரமாக அர்பணிக்கிறேன்.

நமது திவ்விய இரட்சருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட செபத்தின் வரலாறு

கர்த்தர் பிறந்த 803ஆம் வருடத்தில் நமது ஆண்டவருடைய திருக்கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட இப்பரிசுத்த ஜெபமானது, பரிசுத்த பாப்பரசரால், சார்லஸ் என்னும் ராஜாவானவர் யுத்தத்திற்குப் போகும்போது அவர் யாதொரு தீங்குக்குள்ளாகாமல் சுகமே மீண்டும் வர அவருக்கு கொடுக்கப்பட்டது. இப்புனித ஜெபத்தை யாதொருவர் பிரதி தினமும் செபித்தாலும் காதால் கேட்டாலும் அல்லது அவர்களண்டையில் வைத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் சடுதி மரணத்தால் சாகமாட்டார்கள். கர்ப்ப வேதனைப்படும் எந்த ஸ்திரீகளும் இதை செபித்தால் அவர்கள் யாதொரு துன்பமின்றி பிரசவிப்பார்கள். பிறந்த குழந்தையின் வலது பக்கத்தில் இந்த ஜெபத்தை வைத்திருந்தால் யாதொரு ஆபத்தும் நேரிடாது. இசிவு உண்டாகிறவர்களின் வலதுபுறத்தில் இதை வைத்திருந்தால் அவர்கள் உடனே எழுந்து ஆண்டவரை தோத்தரிப்பார்கள். இதை செபித்து வரும் எந்த வீடும் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தால் நிறையும். இதை எப்போழுதும் கூடவே வைத்துக் கொண்டிருப்பவர் மின்னல் இடி முழக்கங்களுக்கெல்லாம் தப்பி வாழ்வார்கள். இவர்கள் மரண நாள் நெருங்குகையில் மூன்று நாள் முன்னதாகவே எச்சரிப்புக்குள்ளாவார்கள் என்று அனேக வேத பாரகர்கள் எழுதிவைத்திருக்கிறார்களென்று சொல்லப்படுகிறது.

திவ்விய இரட்சருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்டஜெபம்:

ஆ! மிகவும் வந்திக்கத்தக்க கர்தாவும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவே! எங்கள் பெரும் பாவத்திற்காக, கொலைக்களத்தில் உண்மையாகவே இறந்தீர். ஆ! கிறிஸ்து இரட்சகருடைய பரிசுத்த சிலுவையே எங்கள் நினைவுகளைக் கவனியும். ஆ! ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையே எந்த ஆயுத அபாயங்களுக்கும் எங்களைத் தப்புவியும். ஆ! கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே, சகல துன்பங்களினின்றும் காப்பாற்றும். ஆ! இயேசு இரட்சகரின் பரிசுத்த சிலுவையே, எங்கள் எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்தருளும். ஆ! எங்கள் கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே! எங்கள் அபாய மரணத்தினின்று எங்களைக் காப்பாற்றி நித்திய ஜீவனைத் தந்தருளும். ஆ! சிலுவையில் அறையுண்ட நசரேனாகிய இயேசுநாதரே, எப்பொழுதும் எங்கள்மீது இரக்கம் வையும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய மகிமையாலும் அவருடைய பாடுகளாலும் உயிர்த்தெழுதலினாலும் தெய்வத்தன்மைக்குரிய மோட்ச ஆரோகணத்தினாலும், எங்களைப் பரலோகத்தில் சேர்க்க உண்மையாகவே அந்த நாளில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தீர். மெய்யாகவே நீர் பிறந்த பதிமூன்றாம் நாள் மூன்று இராஜாக்களால் தூபம், பொன், வெள்ளைப்போளம் முதலிய காணிக்கை அளிக்கப்பட்டீர். பெரிய வெள்ளிக்கிழமையில் கல்வாரி மலையின் மேல் சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விட்டு, நிக்கோதேமு, சூசை எனும் பக்கர்களால் சிலுவையினின்று இறக்கி அடக்கம் செய்யப்பட்டீர். மெய்யாகவே நீர் மோட்சத்திற்கு எழுந்தருளினீர். ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாதருடைய மகிமையானது எங்களை சத்துருக்களுடைய வஞ்சனைகளினின்றும் இப்போதும் எப்போதும் காப்பாற்றும். ஆ! ஆண்டவராகிய இயேசுவே! எங்கள்மீது கிருபையாயிரும். புனித மரியாயே, புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ………… (வேண்டியதை உறுதியாகக் கேட்கவும்).

ஆ! கர்தராகிய இயேசுவே, உம்முடைய பாடுகளின் வழியாய் இந்த பாவ உலகத்தினின்றும் உம்முடைய ஆத்துமம் பிரிந்தது உண்மையே. அப்படியே நாங்களும் எங்கள் வாழ்வில், நாங்கள் படும் துன்பங்களை உமது இரக்கத்தின் கண்கொண்டு பாரும். எங்கள் பாடுகளை யாதொரு பழியும் கூறாமல் பொறுமையோடு சகிக்க கிருபை கூர்ந்தருளும். உமது பாடுகளின் மூலமாக எங்களுக்கு நேரும் எல்லா இடைய+றுகளிலும் இப்போதும் எப்போதும் எங்களைத் தப்புவியும் -ஆமென்.

செபிப்போமாக:
எங்கள் சர்வேசுரா சுவாமி! தேவரீர் வார்தைப்பாடு கொடுத்தபடியினாலே இயேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திருஇரத்தப் பலன்ளைப் பார்த்து எங்கள் பாவங்களையெல்லாம் பொறுத்து, உங்களுக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று உறுதியாக நம்பியிருக்கிறோம். -ஆமென்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here