உறக்கத்தில் இறைத் திருவுளம் உணரும் புனித யோசேப்பிடம் செபம்
எமது ஆண்டவருக்கும் எங்களுக்கும் தந்தையும் கற்பு நெறிமாறா தூய்மையும் மிக பெற்றவரான புனித யோசேப்பே! நீர் குழந்தை இயேசுவைஃ உமது தோள்களில் தாங்கஃ தகுதி மிகுந்தவராகத் தெரிந்து கொள்ளப்பட்டீர் இயேசுவின் மார்போடு அணைக்கவும் பாக்கியம் பெற்றீர் கடவுளை அறியவும்தூய்மையாக இருக்கவும; மறுகிறிஸ்துவாக வாழவும் எங்களுக்குக் கற்பித்தருளும். கிறிஸ்துவைப் போன்று நாங்கள் செயல்பட ஃ எங்களை வழிநடத்தும். உமது உறக்கத்தில் கடவுளின் திருவுளம் உமக்கு வெளிப்பட்டது. எங்களது அன்றாட பணிகள் நடுவில் மேற்கொள்ளும் ஓய்வில் கடவுள் எங்களோடு பேசுகிறார் என்பதை ஃநாங்களும் உணரச் செய்தருளும். கடவுளின் வழிகளை அறிந்து அவர் திருவுளப்படி நடக்க கற்பித்தருளும். வாழ்வில் ஏற்படும் சோதனைகளில் தளர்வடையாமல் உம்மைபோல் இறைவனின் கரத்தை இறுகப்பற்றிக் கொண்டு ஆவியானவரின் வழிநடத்துதலின்படி செயல்பட துணைபுரியும். திருக்குடும்பத்தையும், தாய் திருச்சபையையும நீர் பொறுப்போடு காப்பது போல் ஃநாங்களும் ஃஎங்கள் குடும்பங்களையும், எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்தையுமஃஅனைவரையும் பொறுப்புடன் பாதுகாக்க ! உம் துணையை நாடி மன்றாடுகிறோம். – ஆமென்.
விண்ணுலகில் (1)
அருள் நிறைந்த மரியே வாழ்க (1)
திருத்துவ புகழ்: உறங்கும் நிலையில் இறைத் திருவுளம் உணரும் புனித யோசேப்பே. ‘எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..